News June 26, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்!

*கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்தது. *6ஆம் வகுப்பு முதல் AI மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். *ரத்த சொந்தங்கள், உறவினர்கள் தவிர 3ஆம் நபருக்கு டிக்கெட் புக் செய்து கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ₹10,000 அபராதம் விதிக்கும் வகையில் ரயில்வே சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2025
விஜய் + அதிமுக + பாஜக கூட்டணி.. முடிவு இதுதான்!

கூட்டணி தொடர்பாக விஜய் அதிமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. திமுக அணியில் இருந்து விலக காங்., தயங்குவதால், மீண்டும் அதிமுகவை விஜய் பரிசீலிக்கிறாராம். அப்படி அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டால் கணிசமான இடங்கள் வெல்வதுடன், கரூர் வழக்கையும் சமாளித்துவிடலாம் என நம்புகிறாராம். விரைவில் நேரடியாக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது.
News November 19, 2025
நடிகராகும் தமிழக அரசியல் பிரபலம்

தயாள் பத்மநாபன் இயக்கிவரும் ‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் நடிகராக இணைந்துள்ளார். பாஜகவின் H.ராஜாவும் கதாநாயகனாக ’கந்தன் மலை’ என்னும் படத்தில் நடித்துள்ளார். நாதக தலைவர் சீமானும் ‘LIK’ படத்தில் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக நடித்துள்ளார். அரசியல் தலைவர்களின் சினிமா என்ட்ரி பற்றி உங்கள் கருத்து என்ன?
News November 19, 2025
ஆண்களே, இது உங்களுக்கு தான்!

பெண்களுக்கு ‘Women’s day’ இருக்கும்போது, ஆண்களுக்கு Men’s day இருக்கக் கூடாதா? ஆம், இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்கள் மற்றும் பதின்வயது பையன்கள் சந்திக்கும் சவால்கள், பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் செய்திகளை எடுத்துச் சொல்வதை இந்த ஆண்டின் கருத்துருவாக அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இன்று யாரேனும் ஆண்கள் தின வாழ்த்துச் சொன்னார்களா?


