News June 16, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்!

*பாஜகவால் ஒருபோதும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாது – திருமாவளவன்
*இயக்கத்தில் இருக்கும் 10,020 பழைய பேருந்துகள் அகற்றப்படும் – எஸ்.எஸ்.சிவசங்கர்
*உலகளவில் 4ஆவது பெரிய சந்தையாக மும்பை பங்குச் சந்தை உருவெடுத்துள்ளது.
*காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய வீரர்கள் 8 பேர் உயிரிழப்பு
*டி20 உலகக் கோப்பை: இந்தியா – கனடா ஆட்டம் மழை காரணமாக ரத்தானது
Similar News
News November 13, 2025
இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் சண்டையிட தயார்: பாகிஸ்தான்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலை படைத் தாக்குலுக்கு, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு தொடர்புள்ளதாக <<18263443>>அந்நாட்டு அரசு பேசி<<>> வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் சண்டையிட பாக் தயாராக உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். அதேபோல் சாதாரண கேஸ் வெடிப்பை, வெளிநாட்டு சதி என்பது போல் இந்தியா கூறிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 13, 2025
எனது இன்ஸ்பிரேஷன் அஜித்: துல்கர் சல்மான்

அஜித் இந்த வயதிலும் தனது பேஷனை நோக்கி பயணிப்பது தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். அஜித்தின் ரேஸிங் வீடியோக்கள் தனக்கு பெரும் உத்வேகத்தை தருவதாகவும் கூறியுள்ளார். அதேபோல் பல நாடுகளுக்கு அஜித் பைக்கிலேயே சுற்றி வந்ததை பற்றி பெருமையாக பேசிய துல்கர், அவருக்கு பிடித்ததை தயக்கம் இன்றி செய்து வருவதாகவும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
News November 13, 2025
காவிரி குறுக்கே அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு

காவிரியில் போதுமான அணைகள் இருப்பதால், புதிய அணை கட்ட தேவையில்லை என SC-யில் தமிழ்நாடு தெரிவித்துள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடகா புதிதாக அணை கட்டினால், தமிழ்நாட்டுக்கு வரும் 80 டிஎம்சி தண்ணீர் தடுக்கப்படும். இதனால், லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆரம்ப கட்டத்திலேயே தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.


