News June 14, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ குவைத் தீவிபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு
➤ பிரதமரின் முதன்மை செயலாளராக பி.கே.மிஸ்ரா நியமனம்
➤ பாலியல் வழக்கில் எடியூரப்பாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு
➤ ஆந்திராவை முதல் மாநிலமாக மாற்றுவேன்: சந்திரபாபு நாயுடு
➤ அமித் ஷா அறிவுரை மட்டுமே கூறினார்: தமிழிசை
➤ ‘தேவாரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Similar News

News September 11, 2025

நாசாவில் சீனர்களுக்கு தடை: உஷாரான அமெரிக்கா

image

நாசாவில் பணியாற்ற சீனாவை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. நாசாவில் ஊழியர்களாக சீனர்கள் பணியாற்றவில்லை என்றாலும், ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், ஆய்வாளர்களாகவும் செயலாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நாசாவின் தரவுகளை பயன்படுத்த தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலவுக்கு செல்லும் பயணத்தில் தற்போது சீனாவும், US-வும் கடும் போட்டிபோட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News September 11, 2025

டென்னிஸ் லெஜண்டை நாட்டில் இருந்து வெளியேற்ற அழுத்தம்

image

24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற டென்னிஸ் லெஜண்ட் ஜோகோவிச், செர்பியாவில் இருந்து வெளியேற அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. செர்பியாவில் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டத்தை ஜோகோவிச் ஆதரித்ததால், நாட்டை விட்டு வெளியேற அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால், கிரீஸ் நாட்டிற்கு அவர் தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார்.

News September 11, 2025

நடிகை ஹன்சிகாவுக்கு அதிர்ச்சி

image

<<15081057>>குடும்ப வன்முறை வழக்கில்<<>>, பிரபல நடிகை ஹன்சிகாவின் மனுவை மும்பை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ஹன்சிகாவின் சகோதரரின் மனைவியான முஸ்கான், தன் கணவன், மாமியாருடன் நாத்தனார் ஹன்சிகாவும் சேர்ந்து மனரீதியாக கொடுமைப் படுத்தியதாக புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யும்படி ஹன்சிகா அளித்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், ஹன்சிகா மற்றும் தாயார் ஜோதி இருவருக்கும் முன்ஜாமின் மட்டும் வழங்கியது.

error: Content is protected !!