News May 30, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்!

* பாலியல் புகாரில் சிக்கிய கா்நாடக MP பிரஜ்வால் முன்ஜாமின் மனு தள்ளுபடி.
* பள்ளிகள் திறக்கும் ஜூன் 6ஆம் தேதி பள்ளி மாணவர்கள் ஆதார் பெற நடவடிக்கை எடுக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை.
* பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ், திமுக மனு
* தமிழ்நாட்டில் 18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், வாகனத்தின் RC ரத்து செய்யும் முறை ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது.
Similar News
News November 26, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் அறிவுரை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (நவம்பர்-26) அவமரியாதை மற்றும் இழிவான அணுகு முறைகள் பொறுத்துக் கொள்வதாலும், மன்னிப்பதாலும் தான் பாலியல் குற்றங்கள் நிகழ்கிறது என்றும். பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கவும், பெண்களுக்கு எதிரான புகார்களுக்கு 181 என்ற எண்ணை அழைக்கவும். இதனால் பாலியல் துன்புறுத்தல் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 26, 2025
பணமழை கொட்டப் போகும் 3 ராசிகள்

வரும் டிச.7, 25 தேதிகளில் நடைபெறவுள்ள செவ்வாய் பெயர்ச்சிகளால் பின்வரும் 3 ராசிக்காரர்கள் அதிக நன்மைகள் பெறுவர் எனக் கணிக்கப்படுகிறது *கன்னி: நிதிச்சிக்கல்கள் குறையும், முதலீடு லாபம் தரும். *மகரம்: புதிய சொத்துகள் வாங்கும் யோகம் தொடங்கும், நிதிச்சிக்கல்கள் குறையும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். *கும்பம்: டிசம்பர் மகிழ்ச்சிகரமான மாதமாக அமையும். தம்பதிகள் உறவு மேம்படும். வெற்றியும் லாபமும் கிட்டும்.
News November 26, 2025
6,000 பேரை பணிநீக்கம் செய்யும் HP

AI-ன் வரவால் பல டெக் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில், 2028-க்குள் 4,000 முதல் 6,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக HP தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே AI எவ்வாறு பணியாற்றும் என்பதை ஆய்வு செய்து வந்ததாகவும், இந்த பணிநீக்கத்தின் மூலம் நிறுவனம் ₹8,926 கோடியை சேமிக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும், இது நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதி என்றும் தெரிவித்துள்ளது.


