News May 26, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

* விசிக சார்பாக பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டுள்ளது.
* ஐபிஎல்லில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் KKR – SRH அணிகள் மோதுகின்றன.
* ஜம்மு & காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
* தமிழகத்தில் மே 29ஆம் தேதி வரை படிப்படியாக வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 13, 2026

ராமதாஸ் ஐகோர்ட்டில் அவசர முறையீடு

image

கட்சி பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு தொடர்பாக ராமதாஸ் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு செய்துள்ளது. வழக்கு விசாரணைக்கு உரிமையில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில், ஐகோர்ட்டை ராமதாஸ் நாடியுள்ளார். மேலும், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என கேவியட் மனு தாக்கல் செய்ததையும், அன்புமணி தரப்பு மறைத்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News March 13, 2026

சிலிண்டர் தட்டுப்பாடு.. விலை பாதியாக குறைந்தது

image

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக, கேஸ் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் முதல் தள்ளுவண்டி உணவுக் கடை வரை மூடப்பட்டதால், கோயம்பேடு சந்தையில் மட்டும் தக்காளி, வெங்காயம், கீரை உள்ளிட்ட காய்கறிகள் 2,000 டன் அளவிற்கு தேக்கம் அடைந்துள்ளன. இதனால் காய்கறிகளை பாதி விலையில் விற்பனை செய்தாலும், வாங்குவதற்கு ஆளின்றி வீணாவதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

News March 13, 2026

எரித்து பொசுக்குவோம்… USA-க்கு ஈரான் எச்சரிக்கை

image

ஈரான் ராணுவம் அமெரிக்கா – இஸ்ரேலுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் துறைமுகங்கள் மீது மிகச்சிறிய அளவிலான தாக்குதல் நடத்தினாலும் கூட, கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க நலன்களுக்கு உதவும் அனைத்து எண்ணெய் & எரிவாயு உள்கட்டமைப்புகளையும் எரித்து அழிப்போம் என்றும் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!