News May 23, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்!

*பிரதமர் மோடி ஒய்வு பெறுமாறு அமித் ஷா மறைமுகமாக சொல்கிறார் – ப.சிதம்பரம்
*மக்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதே காங்கிரசின் கொள்கை – பிரியங்கா காந்தி
*2023-24 நிதியாண்டில், தமிழ்நாடு ₹59,655 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
*உலக பாரா தடகள போட்டியில் இந்தியா 12 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்தது.
*மஞ்சுமெல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Similar News
News March 7, 2026
பெரம்பலூர்: திமுக மகளிர் அணியினர் பிரச்சாரம்

பெரம்பலூர் அரணாரையில் மாவட்ட திமுக மகளிர் அணி சார்பாக “வெல்லும் தமிழ்ப் பெண்கள் – ஸ்டாலினின் மகளிர் படை” என்ற பெயரில் வீடு வீடாக சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வு, பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், திமுக மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் ஏற்பாட்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
News March 7, 2026
திமுக டெபாசிட்டை இழக்கும்: ராஜேந்திர பாலாஜி

திமுக தங்களது கூட்டணியில் 50 கட்சிகளை இணைத்தாலும், அனைத்து இடங்களில் டெபாசிட்டை இழக்கும் என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அண்ணா உருவாக்கிய திமுகவை ஸ்டாலின் கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றிவிட்டார் என விமர்சித்த அவர், எங்களை எதிர்க்கும் துணிச்சல் திமுக கூட்டணிக்கு கிடையாது என்றார். மேலும், நாங்கள் டெல்லிக்கு அடிமை கிடையாது; எங்களை அடிமைப்படுத்தும் சக்தி யாருக்கும் கிடையாது எனவும் தெரிவித்தார்.
News March 7, 2026
காங்.,காக மக்கள் நலனை அடகு வைத்த திமுக: அண்ணாமலை

TN உரிமையை காக்காமல், கர்நாடக அரசுக்கு சாதகமாக திமுக அரசு நடப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது, TN மக்களின் நலனுக்கு திமுக செய்யும் துரோகம் என விமர்சனம் செய்துள்ள அவர், காங்கிரஸுடன் கூட்டணியை உறுதி செய்த மறுநாளே காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வருவது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். கூட்டணிக்காக தமிழக விவசாயிகளின் நலனை அடகு வைத்துவிட்டதாகவும் சாடியுள்ளார்.


