News May 19, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*மாநிலங்கள் இடையே மோதலைத் தூண்ட பிரதமர் மோடி முயற்சி செய்கிறார் – ஸ்டாலின்
*காங்கிரஸ் – ஆம் ஆத்மி சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளன – மோடி
*பாகிஸ்தான், பசு மாடு, பாரத மாதா இது தவிர பா.ஜ.,வுக்கு என்ன தெரியும்? – சீமான்
*மெர்கட்டார் பெட்ரோலியம் நிறுவனத்தை ₹148 கோடிக்கு ஐ.ஓ.சி நிறுவனம் கையகப்படுத்தியது.
*CSK அணிக்கு எதிரான லீக் போட்டியில், RCB அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Similar News

News September 13, 2025

உலக தடகள சாம்பியன்ஷிப்: மெடல் குவிக்குமா இந்தியா?

image

உலக தடகள சாம்பியன்ஷிப், ஜப்பானின் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. செப்.21 வரை நடைபெறும் இந்த தொடரில் 198 நாடுகளைச் சேர்ந்த 2,200 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவிலிருந்து நீரஜ் சோப்ரா, முரளி ஸ்ரீசங்கர், குல்வீர் சிங், அங்கிதா தியானி, பூஜா உள்பட 19 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். குறிப்பாக, ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பதக்கங்கள் குவிக்க வாழ்த்துகள்!

News September 13, 2025

‘MLA திருட்டு’ பற்றி ராகுல் வாய் திறப்பாரா? ராமா ராவ் கேள்வி

image

வாக்கு திருட்டை பற்றி பேசும் ராகுல் காந்தி, தெலங்கானாவில் BRS கட்சியிலிருந்து காங்., கட்சி, MLA-க்களை திருடுவது பற்றி மௌனம் காப்பது ஏன் என கே.டி. ராமா ராவ் கேள்வி எழுப்பியுள்ளார். இது ராகுல் காந்தியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், மக்கள் பிரச்னைகளை காட்டிலும் MLA-க்களை திருடுவதில் தான் மாநில காங்., அதிக கவனம் செலுத்துவதாகவும் சாடியுள்ளார்.

News September 13, 2025

நச்சுன்னு 10 படம்: நடிகை திவ்யபாரதியின் ஆசை

image

‘பேச்சுலர்’ படம் மூலம் அறிமுகமான திவ்யபாரதி, பேச்சுலர்களின் மனதை தனது கவர்ச்சி போட்டோஸால் தொடர்ந்து கவர்ந்து வருகிறார். இதனிடையே, ‘மகாராஜா’ படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்த அவர், அடுத்து தலைகாட்டவில்லை. அடுத்த படம் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில், தனது முதல் 10 படங்களை சிறப்பாக கொடுக்க வேண்டும் என நினைப்பதால், பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்வதாக கூறியுள்ளார்.

error: Content is protected !!