News May 16, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ நாட்டில் 70 கோடி பேருக்கு வேலை இல்லை – பிரியங்கா காந்தி
➤ காங்கிரஸ் அகற்றப்பட வேண்டிய கட்சி – பிரதமர் மோடி
➤ INDIA கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் – கார்கே
➤ சபரிமலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம்
➤ பாண்டியாவின் திறமையை குறைத்து மதிப்பிடக்கூடாது – காம்பீர்

Similar News

News October 31, 2025

உலகளவில் இந்தியாவுக்கு 3-வது இடம்

image

உலக வன வள மதிப்பீடு 2025-ன் படி, இந்தியா உலகளவில், 10-வது இடத்தில் இருந்து 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது வனப்பகுதியைப் பாதுகாக்கும் இந்தியாவின் உறுதியைக் எடுத்துக்காட்டுகிறது. மேலும், ஆண்டுதோறும் வனப்பரப்பை விரிவுபடுத்துவதில், இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த வனப்பகுதி 1,797 லட்சம் ஏக்கர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலக வனப்பகுதியில் சுமார் 2% ஆகும்.

News October 31, 2025

அரசு பஸ் கோர விபத்து.. பள்ளி மாணவர்களுக்கு சோகம்

image

ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய கோர விபத்தில், பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் நத்தம் அருகே நடந்த இந்த விபத்தில், ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது. அதில் இருந்த டிரைவர், பள்ளி மாணவ, மாணவியர் உள்பட 11 பேர் அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னால் சென்ற ஆட்டோ மீது அரசு பஸ் மோதியதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. SO SAD.

News October 31, 2025

வான் ஆதிக்கத்தை பலப்படுத்த புதிய ஏவுகணைகள்

image

வான்வழி போர் திறன்களை வலுப்படுத்த இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ரஃபேல் போர் விமானங்களை மேலும் பலப்படுத்த, சுமார் 200 கி.மீ. தூரத்தில் இருக்கும் எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ‘Meteor’ ஏவுகணைகளை வாங்க முடிவெடுத்துள்ளது. இதுமட்டுமல்லாமல், தேஜஸ், சுகோய் Su-30 போன்ற இந்திய விமானங்களுக்கு, ‘அஸ்திரா மார்க் 2’ என்ற புதிய ஏவுகணைகளை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!