News May 15, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்

➤ தென் மாநிலங்களில் பாஜக அதிக இடத்தில் வெல்லும் – அமித் ஷா
➤ காங்கிரஸ் உருவாக்கியதை பாஜக அழித்து வருகிறது – பிரியங்கா
➤ பாஜக 400 இடங்களில் வெல்லும் – அன்புமணி
➤டெல்லி ஐடி அலுவலகத்தில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு
➤இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு
➤ டெல்லிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வி
Similar News
News March 23, 2026
யார் வந்தாலும் இதை மாற்ற முடியாது: CM ஸ்டாலின்

கட்டணமில்லா பஸ் பயணம் திட்டம் யார் வந்தாலும் மாற்ற முடியாது என்ற நிலையில் இருப்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விடியல் பயணம், புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து; திமுக ஆட்சி 2.0-வில் இந்த திட்டம் மேலும் விரிவடைந்து மேன்மையடையும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டம் பிற மாநிலங்களிலும் எதிரொலிக்க துவங்கி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 23, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 23, பங்குனி 9 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: பஞ்சமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு பரிகாரம்: தயிர்.
News March 23, 2026
பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்

தென் பசிபிக் பெருங்கடலில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் நிகழ்ந்ததால், அதிர்வுகள் எதுவும் ஏற்படவில்லை என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையோ அல்லது அச்சுறுத்தலோ எதுவும் பதிவாகவில்லை. கடல் பகுதிகளில் ஆழமான நிலநடுக்கங்களை விட ஆழமற்ற நிலநடுக்கங்கள் அதிக ஆபத்தானவை என்று கூறப்படுகிறது.


