News March 17, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ➤ தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் ➤ மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4இல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்➤ நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. ➤ 2047ஆம் ஆண்டு தேர்தலுக்கு திட்டமிட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Similar News

News January 6, 2026

நடிகை மீனாவின் புதிய PHOTOS

image

2026 புத்தாண்டை நடிகை மீனா வெளிநாட்டில் உற்சாகமாக கொண்டாடியுள்ளார். அவர் SM-ல் பகிர்ந்துள்ள போட்டோக்கள் வைரலாகும் நிலையில், அதற்கு ரசிகர்கள் ❤️❤️❤️ விட்டு சின்ன குழந்தை போல கியூட்டாக இருக்கீங்க என கமெண்ட் செய்கின்றனர். அவர் சென்ற இடங்கள் ஒவ்வொன்றும் இயற்கை எழில் சூழ்ந்து காட்சியளிக்கின்றன. இதுபோல நாங்களும் குதூகலிக்க, இடத்தை சொன்னால் நன்றாக இருக்கும் என மீனாவிடம் ரசிகர்கள் கேட்கின்றனர்.

News January 6, 2026

வங்கி கணக்கில் ₹10,000.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

image

CM திறனாய்வு தேர்வுக்கு 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஜன.8 வரை நீட்டித்து TN அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜன.31-ல் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இதில் தேர்வாகும் 1,000 மாணவர்களுக்கு கல்வியாண்டுக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். <>www.dge.tn.gov.in<<>> தளத்தில் டவுன்லோடு செய்யப்படும் விண்ணப்பத்தை நிரப்பி HM வசம் ஒப்படைக்க வேண்டும். SHARE IT

News January 6, 2026

புது கட்சியை தொடங்கினார் காடுவெட்டி குருவின் மகள்

image

‘ஜெ குரு பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளதாக காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தெரிவித்துள்ளார். கட்சியை ECI-ல் பதிவு செய்துள்ளோம். ஜன.9-ம் தேதி சேலத்தில் தொடக்க விழா நடைபெற உள்ளது. ராமதாஸ் – அன்புமணி சண்டையால் வன்னியர் இன மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. கொள்கையை மறந்துவிட்டு, பாமகவை குடும்ப கட்சியாக ராமதாஸ் மாற்றிவிட்டார் என அவர் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!