News August 27, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪அரசியல்வாதி போல் <<17530864>>விஜய் <<>>நடக்க வேண்டும்: தமிழிசை
✪IPL-ல் இருந்து ஓய்வு அறிவித்தார் <<17531275>>அஸ்வின்<<>>
✪டிரம்ப்பின் 50% வரி <<17530648>>அமலானது<<>>.. ஸ்தம்பித்த துறைகள்
✪தங்கத்தின் <<17530907>>விலை <<>>சவரனுக்கு ₹280 உயர்ந்தது
✪கடத்தல் <<17531464>>வழக்கு<<>>.. நடிகை லட்சுமி மேனன் தப்பியோட்டம்
Similar News
News August 27, 2025
தமிழகத்தில் கடன் வட்டி தள்ளுபடி

TNHB-ல் வீடு வாங்கி தவணை கட்ட தவறியவர்களுக்கு அபராத வட்டியை அரசு தள்ளுபடி செய்துள்ளது. 2015 மார்ச் 31-ம் தேதிக்கு முன்னர், தவணை காலம் முடிந்த குடியிருப்புகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை, தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு இந்த சலுகை பொருந்தும். இது மார்ச் 31 2026 வரை அமலில் இருக்கும். தற்போது சென்னை, கோவை, திருச்சி மாவட்ட கலெக்டர்களும் பயனாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
News August 27, 2025
குடும்பத்திற்கு ₹3,000.. CM ஸ்டாலின் அதிரடி முடிவு

மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களில் அரசு மாதந்தோறும் தலா ₹1,000 வழங்குகிறது. 2026 பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் இவை முக்கிய பங்கு வகிக்க உள்ளன. பெரும்பாலான குடும்பங்களில் அம்மா, மகள், மகன் என 3 பயனாளர்கள் உள்ளதால் ‘குடும்பத்திற்கு ₹3,000 வழங்கும் அரசு’ என்ற பெயரில் பரப்புரையை மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?
News August 27, 2025
இந்த லிங்குகளை கிளிக் பண்ணாதீங்க.. TN போலீஸ்

ஆன்லைன் டிரேடிங் முதலீடு மோசடியில் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ள TN போலீஸ், மக்களுக்கு சில எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.
✱சோஷியல் மீடியா, WhatsApp போன்றவற்றில் வரும் மெசேஜ்களை, நம்பி பணத்தை முதலீடு செய்யவேண்டாம்.
✱பேங்க் அக்கவுண்ட் விவரங்களை தெரியாதவர்களிடம் பகிர வேண்டாம்.
✱முதலீடு செய்வதற்கு முன், SEBI இணையதளத்தில் சரிபார்க்கவும் அறிவுறுத்தியுள்ளது. SHARE IT.