News October 9, 2025
இன்று ஒரே நாளில் ₹1,000 விலை மாறியது

<<17954827>>தங்கத்துடன்<<>> போட்டிப் போட்டுக்கொண்டு வெள்ளி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில், இன்று(அக.9) வெள்ளி கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹171-க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ₹1 கிலோவுக்கு ₹1,000 அதிகரித்து ₹1,71,000 ஆக விற்பனையாகிறது. தங்கத்தை போல வெள்ளியிலும் முதலீடுகள் அதிகரிப்பதால் விலை அதிகரித்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
Similar News
News December 13, 2025
2025-ல் அதிக குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த டாப் 5 நாடுகள்!

இந்த நாடுகளில் எங்கு பார்த்தாலும் கொள்ளை கொலை சம்பவங்கள்தான். அரசும், காவல்துறையும் தடுமாறும் சூழலில், கயவர்கள் கைவரிசை காட்டி, மக்களை அச்சுறுத்துகின்றனர். குற்ற சம்பவங்கள், நிதி & சைபர் மோசடிகள் ஆகியவற்றின் அடிப்படையில் 2025-ல் உலகின் டாப் 5 மிக ஆபத்தான நாடுகளின் பட்டியலை ‘நம்பியோ’ என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது. எந்தெந்த நாடுகள் உள்ளன என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe பண்ணுங்க.
News December 13, 2025
காங்கிரஸில் இருந்து விலகுகிறாரா சசி தரூர்?

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் MP-க்கள் கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்தது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அண்மைக் காலமாக சோனியா, கார்கே ஆகியோரின் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வரும் அவர், PM மோடி, மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் அதிகம் தலையை காட்டி வருகிறார். இதனால், அவர் கேரள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் பாஜகவில் இணைவதற்கு அச்சாரமிடுவதாக பேச்சு எழுந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
News December 13, 2025
இந்தியா மீதான டிரம்ப்பின் வரியை நீக்க தீர்மானம்

இந்திய பொருள்கள் மீது டிரம்ப் விதித்த 50% வரியை முடிவுக்கு கொண்டுவர, US பிரதிநிதிகள் சபையின் 3 உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த வரியை சட்டவிரோதமானது எனக்கூறிய டெபோரா ராஸ், மார்க் வீசி, ராஜா கிருஷ்ணமூர்த்தி(இந்திய வம்சாவளி), இதனால் USA தொழிலாளர்கள், நுகர்வோர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். வரியை நீக்கினால் இருநாடுகள் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு வலுப்பெறும் எனவும் கூறினர்.


