News September 17, 2025
இன்று புரட்டாசி.. பெருமாளை இப்படி வழிபடுங்க!

புரட்டாசி மாதத்தில், வீட்டை சுத்தம் செய்து வைக்கவும். வீட்டில் உள்ள பெருமாள் படத்தை துடைத்து துளசி மாலை அணிவித்து, சந்தனம் குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, கற்கண்டு, பால், துளசி தீர்த்தம் ஆகியவற்றை பெருமாளுக்கு நைவேத்தியமாக படைத்து எளிமையாக வழிபடலாம். முடிந்தவர்கள் பானகம், சுண்டல், வடை, சர்க்கரை பொங்கல் போன்றவைகளையும் படைத்து வழிபடலாம். SHARE.
Similar News
News September 17, 2025
ASIA CUP: பும்ரா இடத்தில் யார்?

UAE மற்றும் பாகிஸ்தானுடனான ஆட்டங்களில் பெற்ற அசத்தலான வெற்றிகளின் மூலம் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில், ஓமனுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அர்ஷ்தீப், ஹர்சித் ராணா ஆகிய இருவரில் ஒருவருக்கு ஆசிய கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம்.
News September 17, 2025
PM மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

இன்று 75-வது பிறந்தநாள் கொண்டாடும் PM மோடிக்கு, ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துவதாக அவர், தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல், <<17734718>>CM ஸ்டாலினை<<>> தொடர்ந்து தமிழகத்திலிருந்து EPS, OPS, அன்புமணி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை, வானதி சீனிவாசன், பாரிவேந்தர் உள்ளிட்ட பலரும் PM மோடிக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
News September 17, 2025
கதை ரெடினா கமலுடன் ஷூட்டிங் போலாம்: ரஜினி

கமல், ரஜினி இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அந்த படத்தின் அப்டேட்டை ரஜினியே கொடுத்துள்ளார். இருவரும் இணைந்து நடிக்க ஆசையாக உள்ளதாக கூறிய அவர், இன்னும் சரியான இயக்குநர் அமையவில்லை என கூறினார். நல்ல கதை மற்றும் கதாபாத்திரங்கள் அமைந்தால் விரைவில் ஷூட் போகலாம் எனவும் தெரிவித்தார்.