News November 24, 2024
இன்றைய (நவ.24) நல்ல நேரம்!

▶நவம்பர் – 24 ▶கார்த்திகை – 09 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 06:00 AM – 07:00 AM & 03:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 01:30 PM – 02:30 PM ▶ராகு காலம்: 04:30 PM – 06:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM ▶குளிகை: 03:00 PM – 04:30 PM ▶திதி: நவமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: உத்திராடம்
Similar News
News December 6, 2025
காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்

காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் சக்திவேல் வீரமரணம் அடைந்துள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டம், சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தை சேர்ந்தவர். காஷ்மீர் எல்லைப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போது PAK பயங்கரவாதிகளுடனான சண்டையில் சக்திவேல் வீரமரணம் எய்தினார். அவரது உடல், சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தாய்நாட்டை காத்த சக்திவேலுக்கு பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.
News December 6, 2025
விஜய் தொகுதியில் போட்டியிடுவேன்.. அறிவித்தார்

2026 தேர்தலில் விஜய்க்கு எதிராக களம் காண்பேன் என NTK கொள்கைப்பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார். விஜய் போட்டியிடும் தொகுதியின் விவரம் வெளியான பிறகு, தானும் அதே தொகுதியில் போட்டியிடுவதற்கு சீமானிடம் அவர் அனுமதி கேட்டுள்ளதாக NTK வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் காரணமாகவே, நேற்று வெளியான <<18478564>>NTK முதற்கட்ட வேட்பாளர்கள்<<>> பட்டியலில் அவரது பெயர் இல்லை என கூறப்படுகிறது.
News December 6, 2025
பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.. ஆட்சியர் அறிவித்தார்

சென்னையில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இன்று செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிச.2-ல் மழை காரணமாக அளிக்கப்பட்ட விடுப்பை ஈடு செய்யும் வகையில் பள்ளிகள் செயல்படவுள்ளன. புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. டிச.2-ல் செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூருக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


