News March 18, 2025
இன்றைய (மார்ச் 18) நல்ல நேரம்

▶மார்ச் – 18 ▶ பங்குனி – 04 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 03:00 PM – 04:30 PM ▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 01:30 PM ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
Similar News
News March 18, 2025
கொளுத்தும் வெயில்; சூடுபிடிக்கும் ஏசி விற்பனை…

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியிருப்பதால், பகல் நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம், வெப்பத்தை தணிப்பதற்கான வியாபாரமும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. குளிர்பானங்கள் முதல் ஏ.சி, ஏர்கூலர், டியோடரன்டுகள் வரை விற்பனை மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் வியாபாரிகள் முகத்தில் தென்றல் வீசத் தொடங்கியுள்ளது.
News March 18, 2025
திமுக வெற்றி செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், அவரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி, ராஜமாணிக்கம் என்பவர் ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்தார். இதை விசாரித்த நீதிபதி இளந்திரையன், திமுகவின் வெற்றி செல்லும் என உத்தரவிட்டுள்ளார்.
News March 18, 2025
டிராகன் -யானை டான்ஸ் தான் தீர்வு: சீனா

பங்காளிகளாக பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கி, டிராகன் – யானை நடனத்தை அடைவது மட்டும் தான் சீனா- இந்தியாவிற்கு சரியான தேர்வாக இருக்கும் என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. முன்னதாக, அண்டை நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பது இயற்கையானதுதான், அதற்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி பேசியிருந்தார்.