News March 14, 2025
இன்றைய (மார்ச் 14) நல்ல நேரம்

▶மார்ச்- 14 ▶மாசி – 30 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 05:00 PM – 06:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 AM ▶எமகண்டம்: 03:00 AM – 04:30 AM ▶குளிகை: 07:30 AM- 09:00 AM ▶திதி: பிரதமை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: அவிட்டம் ▶நட்சத்திரம் : பூரம்.
Similar News
News March 14, 2025
நெடுஞ்சாலைத்துறைக்கு ₹20,772 கோடி ஒதுக்கீடு!

நெடுஞ்சாலைத் துறைக்கு ₹20,772 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். கோவையில் 12.5 கிமீ நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்க ₹348 கோடியும், நெல்லையில் 12.4 கிமீ நீளத்திற்கு அமைக்க ₹225 கோடியும் ஒதுக்கப்படுகிறது. அதே போல் நெடுஞ்சாலைகளை பசுமையாக்க வேம்பு, புளியமரக்கன்றுகள் நடப்படும் என்றும் பட்ஜெட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
News March 14, 2025
விசைத்தறிகளை நவீனப்படுத்த ₹50 கோடி!

விசைத்தறிகளை நவீனப்படுத்த ₹50 கோடி ஒதுக்கப்படும். உயர்மதிப்புடைய ஆடைகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கைத்தறித் துறைக்கு ₹1,980 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல, விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ₹673 கோடி ஒதுக்கப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
News March 14, 2025
தமிழகத்திற்கு வருகிறது மிக அதிவேக ரயில்கள்!

தமிழகத்தில் மிக அதிவேக ரயில்கள் இயக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, சென்னை – விழுப்புரம், சென்னை – வேலூர் இடையே மணிக்கு 160 கி.மீ. வேகத்திலான ரயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் மூலமாக இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.