News January 1, 2025
இன்று (ஜன. 1) முதல் வரும் முக்கிய மாற்றங்கள்

* சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் * UPI 123 pay மூலம் இனி ₹10,000 வரை பரிமாற்றம் செய்யலாம். * விவசாயிகள் இனி ₹2 லட்சம் வரை unsecured லோன் பெற்றுக் கொள்ளலாம் * NSE பங்குச்சந்தை தனது expiry தேதிகளில் மாற்றம் செய்துள்ளது * PF பணத்தை ஏடிஎம் மையங்களில் எடுக்கும் வசதி 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. * வருமான வரியில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன.
Similar News
News December 5, 2025
புடினை இந்த காரில் PM கூட்டி சென்றது ஏன்? DECODES

Range Rover, Mercedes போன்ற காஸ்ட்லியான கார்கள் இருக்கையில் புடினை, PM மோடி Fortuner-ல் அழைத்து சென்றுள்ளார். Range Rover UK உடையது, benz ஜெர்மனி உடையது. உக்ரைன் போரை கண்டித்து இவ்விரு நாடுகளும் ரஷ்யா மீது அதிக வரிகளை விதித்துள்ளன. எனவேதான் PM அந்த கார்களை தேர்ந்தெடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிகழ்வு இந்தியா-ரஷ்யா இடையிலான நட்புறவையும், வெளியுறவு கொள்கையையும் வெளிகாட்டுவதாக பேசப்படுகிறது.
News December 5, 2025
திருப்பரங்குன்றம் விவகாரம்: லோக்சபாவில் காரசார வாதம்

லோக்சபாவில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. பாஜக, மதரீதியான கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டினார். நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு இணையமைச்சர் எல்.முருகன், திமுக மக்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதாக விமர்சித்த நிலையில், இதற்கு திமுக MP-க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
News December 5, 2025
4 ஆண்டுகளில் 9 மடங்கு வளர்ச்சி: CM ஸ்டாலின்

ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் ₹1,003 கோடி முதலீட்டில் பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜி ஆலையை CM ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து பேசிய அவர், மின்னணு பொருள்களின் தலைநகரமாக தமிழகம் திகழ்கிறது என பெருமிதம் தெரிவித்தார். மேலும், மின்னணு துறையில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 9 மடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


