News August 27, 2025
இன்று ஒரே நாளில் ₹4,500 உயர்ந்தது

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றுவிட்டு சென்னை திரும்ப நினைத்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆம்னி பஸ்களில் விமானத்தை விட கட்டணம் அதிகரித்துள்ளது. வழக்கமாக மதுரை – சென்னைக்கு ₹600 – ₹900 வசூலிக்கப்படும் நிலையில் இன்று ₹6,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சி – சென்னை ₹2,300, நாகர்கோவில் – சென்னை ₹4,500, நெல்லை – சென்னை ₹5,000 வரை உள்ளதால் பொதுமக்கள் புலம்புகின்றனர்.
Similar News
News March 8, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (07.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 8, 2026
₹8,000 வரை ஊதிய உயர்வு.. அரசின் இன்ப அதிர்ச்சி

ரேஷன் கடை ஊழியர்களுக்கு TN அரசு ஊதிய உயர்வு அளித்ததன் மூலம், புதிய பணியாளர்களுக்கு ₹2,000, சீனியர்களுக்கு ₹8,000 வரை கூடுதல் ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக ஊதிய உத்தரவுக்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகி இருப்பதாக அனைத்து ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அகவிலைப்படியை 58% ஆக உயர்த்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News March 8, 2026
கண்களை பாதுகாக்க இதை செய்ய மறக்காதீர்

*அதிக நேரம் எதையும் உற்றுப் பார்க்காதீர்கள். கண்களை அடிக்கடி சிமிட்டுவது அவசியம். *குடல் சுத்தமாக இருந்தால் கண் பார்வையும் தெளிவாக இருக்கும். *இரு உள்ளங்கைகளால் இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய்த பிறகு, கண்களுக்கு ஓய்வளியுங்கள். *வெளிச்சம் குறைந்த இடங்களில் இப்படி பயிற்சி செய்வது நல்லது. SHARE IT


