News August 23, 2025
இன்று ஒரே நாளில் ₹2,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கம் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. ஒருகிராம் வெள்ளி விலை ₹2 உயர்ந்து ₹130-க்கும் கிலோ வெள்ளி ₹2000 உயர்ந்து ₹1,30,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் ₹1000, நேற்று ₹2000, இன்று ₹2000 என மூன்றே நாளில் ₹5000 அதிகரித்துள்ளது. வெள்ளி நகைகளையும் இனி வங்கிகளில் அடகு வைக்கலாம் என RBI பரிந்துரை அளித்துள்ள நிலையில், வெள்ளி விலை அதிகரித்து வருகிறது.
Similar News
News March 17, 2026
ஈரோடு: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

ஈரோடு மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!
News March 17, 2026
ஸ்பீட் போஸ்ட்.. புதிய சேவைகள் அறிமுகம்

‘24 ஸ்பீட் போஸ்ட்’ மற்றும் ‘48 ஸ்பீட் போஸ்ட்’ என்ற புதிய சேவைகளை இந்தியா போஸ்ட் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி இன்று முதல் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் கிடைக்கும். தபால் / பொருட்கள் 24 மணி நேரம் & 48 மணி நேரத்துக்குள் உறுதியாக டெலிவரி செய்யப்படும் என்றும் இதில் தாமதம் ஏற்பட்டால் செலுத்தப்பட்ட பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
News March 17, 2026
வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை

லீவு என்றாலே பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சிதான். அந்த வகையில், இந்த வாரத்தில் 3 நாள்கள் விடுமுறையாகும். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி அரசு விடுமுறையாகும். இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை, ஞாயிற்றுக்கிழமை என அடுத்தடுத்து லீவுதான். 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு நெருங்கி வருவதால், விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் மாணவர்களே!


