News March 30, 2024
வேட்புமனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாள்

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கடந்த 20ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் 27ம் தேதியுடன் முடிந்தது. 28ம் தேதி முதல் வேட்புமனு பரிசீலனை நடந்து, 1,085 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும். அத்துடன், சின்னம் ஒதுக்கப்படாத கட்சிகள், சுயேச்சைகளுக்கு சின்னமும் ஒதுக்கப்படும்.
Similar News
News January 26, 2026
அமெரிக்காவின் ரகசிய ஆயுதத்தை வெளியிட்ட டிரம்ப்

வெனிசுலா அதிபர் <<18758081>>மதுரோவை கைது<<>> செய்ய பயன்படுத்தப்பட்ட ரகசிய ஆயுதம் குறித்த தகவலை டிரம்ப் பகிர்ந்துள்ளார். Discombobulator என்பதன் மூலமே வெனிசுலாவில் இருந்த ரஷ்ய மற்றும் சீன ஏவுகணைகளை செயலிக்க வைத்ததாகவும், இதுகுறித்து விரிவாக சொல்ல தனக்கு அதிகாரம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீதான தாக்குதல்கள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
News January 26, 2026
வீர தீர செயலுக்கான விருதுகளை வழங்கிய CM

சென்னையில் நடைபெற்ற 77-வது குடியரசு தினவிழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு CM ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். அதன்படி வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள் தீயணைப்பு வீரர்கள் சங்கர், சுரேஷ், ரமேஷ்குமார், பீட்டர் ஜான்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருதை கலிமுல்லா மற்றும் வேளாண்மை நலத்துறையின் சிறப்பு விருதை நாராயணசாமி நாயுடுவும் பெற்றுக்கொண்டனர்.
News January 26, 2026
ஏன் குடியரசு தினத்தில் கொடியை ஏற்றுவதில்லை?

இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த தினத்தை நினைவுகூரும் நாளே குடியரசு தினம். நாடு ஏற்கெனவே விடுதலைப் பெற்றதால், <<18959128>>குடியரசு தினத்தில்<<>> கொடியை ஏற்றாமல் பறக்க விடுவார்கள். நாட்டின் முதற்குடிமகனான குடியரசுத்தலைவர்தான் கொடியை அவிழ்ப்பார். 1929-ல், இந்திய தேசிய காங்கிரஸ், பிரிட்டிஷ் ஆட்சியின் டொமினியன் அந்தஸ்தை எதிர்த்து சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டதால், ஜனவரி 26 குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.


