News March 31, 2024
பாஸ்ட் டேக்கில் கேஒய்சியை புதுப்பிக்க இன்றே கடைசி

சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த பயன்படுத்தப்படும் பாஸ்ட் டேக்கில் கேஒய்சி விவரத்தை புதுப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஆதலால் சம்பந்தப்பட்ட வங்கியில் நேரிலோ அல்லது இணையதளம் மூலமோ கேஒய்சி விவரத்தை இன்றைக்குள் புதுப்பிக்கும்படி தேசிய நெடுஞ்சாலைத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. கேஒய்சி விவரம் புதுப்பிக்கவில்லையெனில் பாஸ்ட் டேக் கணக்கு முடக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
Similar News
News November 8, 2025
முடி கொட்டுதா? அப்போ இத யூஸ் பண்ணுங்க!

நோயில்லாத வாழ்வுக்கு தினமும் முருங்கையை உணவில் சேர்க்க வேண்டும் என சொல்வர். இத்தனை சிறப்பு மிக்க முருங்கையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், முடி உதிர்வுக்கும் அருமருந்தாகிறதாம். முருங்கை விதைகளை காயவைத்து பொடியாக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, எடுத்துக்கொள்ளுங்கள். வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெயை தலையில் தேய்த்துவர முடி உதிர்வு குறையுமாம். முடி எல்லாருக்கும் கொட்டுது, SHARE THIS.
News November 8, 2025
தமிழகத்தில் பள்ளி பஸ்ஸுக்கு பாதுகாப்பு இல்லையா? EPS

திமுக ஆட்சியில் பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்கள் அரங்கேறுவது தொடர்கதையாகியுள்ளதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். மயிலாடுதுறையில் பள்ளி பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நாகையில் VAO சடலமாக மீட்பு உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி இந்த குற்றச்சாட்டை அவர் வைத்துள்ளார். பள்ளி பஸ் கூட சாலையில் பாதுகாப்பாக செல்ல முடியாத அவல நிலைக்கு CM என்ன பதில் வைத்திருக்கிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 8, 2025
தமிழகத்தின் பழமையான கோயில்கள் லிஸ்ட்

தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள், வரலாற்று சிறப்புடையவை. ஆன்மிக சுற்றுலா செல்வோர், எந்த கோயில்களுக்கு செல்வது என்பதில் குழப்பம் இருக்கும். கவலையை விடுங்க. கண்களை மூடிக்கொண்டு, பிரசித்தி பெற்ற இந்த பழமையான கோயில்களுக்கு செல்லுங்கள். அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.


