News March 17, 2024
வாக்காளர் பட்டியலில் சேர இன்றே கடைசி நாள்

18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று (மார்ச் 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் கூட தற்போது விண்ணப்பிக்கலாம். தங்கள் பெயரை சேர்க்க விரும்புவோர், www.voters.eci.gov.in இணையதளத்திலும், ‘Voter Helpline’ செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News September 5, 2025
செங்கோட்டையன் மனம் திறக்கவில்லை: திருமா

செங்கோட்டையன் சொன்னது போல் முழுமையாக, மனம் திறந்து பேசவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி பேச விரும்பவில்லை, ஆனாலும் அவர் இன்னும் வெளிப்படையாகவே பேசியிருக்கலாம் எனவும் கூறியுள்ளார். பெரியார் இயக்கம் என்ற முறையில் விசிக, அதிமுகவை பெரிதும் மதிக்கிறது என்றார்.
News September 5, 2025
ஆசிரியர்களுக்காக குரல் கொடுத்த விஜய்

ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு அவர், தனது X தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஏற்றமிகு தலைமுறையை உருவாக்கி வரும் ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்கள் வாழ்வில் ஏற்றம் காண வழிவகை செய்யுமாறு அரசுக்கு விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
News September 5, 2025
தமிழக அமைச்சர்களின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா!

TN அமைச்சர்களின் சொத்து பட்டியல் வெளியாகி உள்ளது. R.காந்தி (₹47.94 கோடி), TRB ராஜா (₹41.81 கோடி), பழனிவேல் தியாகராஜன் (₹38.89 கோடி), துரைமுருகன் (₹30.80 கோடி), உதயநிதி (₹29.07 கோடி), எ.வ.வேலு (₹23.32 கோடி), சாமிநாதன் (₹21.07 கோடி), ரகுபதி (₹15.32 கோடி), முத்துசாமி (₹13.68 கோடி) சிவசங்கர் (₹13.55 கோடி) ஆகியோர் முதல் 10 இடத்தில் உள்ளனர். ( ADR REPORT தரவுகளின் அடிப்படையில் சொத்து மதிப்பு)