News December 10, 2024
NET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

பல்கலைக்கழக மானியக் குழு(UGC) நடத்தும் Ph.D, பேராசிரியர், விரிவுரையாளர், JRF ஆகியவற்றுக்கான நுழைவுத் தேர்வுக்கு(NET) விண்ணப்பிக்க, இன்றே (டிச.10) கடைசி நாள் ஆகும். வரும் ஜன.1 முதல் ஜன.19 வரை, வெவ்வேறு பாடப்பிரிவுகளுக்கான NET தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கு https://ugcnet.nta.ac.in/ என்ற இணையதளத்தில், தகவல்களை பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை பகிருங்கள்.
Similar News
News March 5, 2026
2 வாரங்களில் தவெக வேட்பாளர் பட்டியல்

2026 தேர்தலில் தனித்து களமிறங்க திட்டமிட்டுள்ள தவெக, 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிக்கு 4 வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை ஏற்கெனவே முடித்துள்ள விஜய், அவர்களிடம் விரைவில் நேர்காணல் செய்யவிருக்கிறார். அதன்பின், வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, தொகுதி வாரியாக பரப்புரை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
News March 5, 2026
BREAKING: கூட்டணி.. இபிஎஸ் புதிய அறிவிப்பால் பரபரப்பு

அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகி இறுதி வடிவம் பெற்றுவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கட்சியின் மா.செ., கூட்டத்தில் EPS அறிவித்துள்ளார். எனவே, தேர்தல் பணிகளை முடுக்கிவிடும்படி அவர் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். திமுகவும் தொகுதிப் பங்கீட்டை கிட்டத்தட்ட இறுதி செய்துள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
News March 5, 2026
நாதகவை பார்த்து பலருக்கு கண்ண உறுத்துது: சீமான்

இன்று அரசியல் என்பது அரிசியும், பருப்பும், வேட்டியும், சேலையும், ஆயிரமும், ஐநூறுமாக இருக்கிறது என சீமான் விமர்சித்துள்ளார். 100 ரூபாயை கொடுத்துவிட்டு ₹200-க்கு விளம்பரம் செய்வதாக கூறிய அவர், இந்த அரசியலை மாற்ற வேண்டும் என்றார். மேலும், நாதக தனித்து போட்டியிடுவது பலருக்கு கண்ணை உறுத்துகிறது எனவும், கூட்டணி வைக்காமல் எப்படி ஜெயிக்கிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் சவால்விட்டிருக்கிறார்.


