News June 27, 2024
விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்வேறு கிராமிய வங்கிகளில் காலியாக உள்ள 9,995 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பணியின் தன்மையைப் பொறுத்து வயதில் மாற்றம் இருக்கும். இதற்கு www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என வங்கி பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
Similar News
News January 5, 2026
காரைக்குடி தொகுதியில் போட்டியா? சீமான்

பல தொகுதிகளுக்கான நாம் தமிழர் வேட்பாளர்களை சீமான் அறிவித்துவிட்டார். இதனிடையே அவர் காரைக்குடியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது திருச்சி மாநாட்டில், தான் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார். கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பது பொய் என்றும், ஜெயலலிதா, கெஜ்ரிவால் ஆகியோர் தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
News January 5, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 5, மார்கழி 21 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்:10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: துவிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
News January 5, 2026
SPORTS 360°: இங்கிலாந்தை மீட்டெடுத்த ரூட், புரூக்

*டெல்லியில் நடந்த தேசிய ஜூனியர் குதிரயேற்ற போட்டியில் தமிழக வீரர் சுப் சவுத்ரி 2 தங்கம் வென்றார். *கடைசி ஆஷஸ் போட்டியின் அரைசதம் அடித்து, ரூட்(72), ஹேரி புரூக்(78) இங்கிலாந்தை சரிவில் இருந்து மீட்டனர். *தேசிய கூடைப்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் TN ஆண்கள் மற்றும் பெண்கள் அணி வெற்றியுடன் தொடங்கியது. *WPL-லில் உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் நியமிக்கப்பட்டுள்ளார்..


