News September 28, 2024
இன்றே கடைசி: உடனே விண்ணப்பிங்க

மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் காலியாக இருக்கும் 250 இடங்களுக்கு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். NTPCஇல் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் துணை மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பப்பதிவு நடைபெறுகிறது. இதற்கு 3-10 ஆண்டு வரை முன் அனுபவம், BE, B-TECH தேர்ச்சி அவசியம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை NTPCஇன் www.careers.ntpc.co.in இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
Similar News
News December 13, 2025
ஆட்டத்தை தொடங்கினார் செங்கோட்டையன்

2026 தேர்தலில் விஜய் தலைமையில் கூட்டணி அமைக்கும் பணிகளை தவெக முடுக்கிவிட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைக்கான சிறப்புக் குழு நேற்று அமைக்கப்பட்ட நிலையில், விஜய்யை CM வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் என செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார். பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்டவை தற்போதுவரை கூட்டணியை உறுதி செய்யவில்லை. அக்கட்சிகளை இழுக்க காய் நகர்த்தி வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News December 13, 2025
தொடரும் வேட்டை.. 10 மாவோயிஸ்ட்கள் சரண்

2026 மார்ச் 31-க்குள் நாட்டில் இருந்து மாவோயிஸ்ட்களை அகற்ற மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக, சத்தீஸ்கரில் நேற்று 6 பெண்கள் உள்பட 10 பேர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்துள்ளனர். இவர்களைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ₹33 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 11 மாதங்களில், சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் மட்டும் 1,514 பேர் சரணடைந்துள்ளனர்.
News December 13, 2025
இன்று இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. அதன்படி, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறியுள்ளது.


