News June 26, 2024
இன்று இறுதி வேட்பாளர்கள் பட்டியல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், 29 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்பதால், மாலை 3 மணிக்கு மேல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 30, 2025
RRB-யில் 2,570 பணியிடங்கள்.. ₹35,400 சம்பளம்!

RRB-யில் காலியாக உள்ள 2,570 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18- 33 வயதுக்குட்பட்ட Diploma, B.E, B.Tech படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். வரும் நவம்பர் 30-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் அப்ளை பண்ண <
News October 30, 2025
PM மோடிக்கு தைரியம் இருந்தால்.. ராகுல் விட்ட சவால்

இந்திரா காந்தி என்ற பெண், மோடி என்ற ஆணை காட்டிலும் தைரியமானவர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 1971 போரின் போது இந்தியாவை மிரட்ட USA கப்பல்படையை அனுப்பியதாகவும், ஆனால் அப்போதைய PM இந்திரா காந்தி, அதற்கு அச்சப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், PM மோடிக்கு உண்மையில் தைரியம் இருந்தால், போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் சொல்வது பொய் என கூறட்டும் என்றும் சவால் விட்டுள்ளார்.
News October 30, 2025
இந்தியாவுக்கு எதிராக AUS வீராங்கனை அதிரடி சதம்

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியா வீராங்கனை லிட்ச்ஃபீல்ட் அதிரடி சதம் விளாசியுள்ளார். இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்ட அவர் 77 பந்துகளில் சதம் அடித்தார். இப்போட்டியில் லிட்ச்ஃபீல்ட் இதுவரை 18 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்துள்ளார். உலகக் கோப்பையில் இது அவருக்கு முதல் சதமாகும். அவருடைய விக்கெட்டை வீழ்த்தினால் மட்டுமே ரன் வேகத்தை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியும்.


