News August 14, 2025
17 வயது சச்சின் சிறப்பான சம்பவம் செய்த நாள் இன்று

1990-ம் ஆண்டு இதே நாளில் மான்செஸ்டரில் இந்திய கிரிக்கெட் அணியை வெல்ல வைக்க களமிறங்கியது இளஞ்சிங்கம். அன்று அவருக்கு வயது 17. அந்த இளம் வீரர், 189 பந்துகளில் 17 பவுண்டரிகள் உடன் 119 (முதல் சதம்) ரன்களை விளாசினார். இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தாலும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அவரை திரும்பிப் பார்த்தது. அவர்தான் கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர்.
Similar News
News August 14, 2025
சர்க்கரையை குறைக்க Sugar Diet மட்டும் போதுமா?

நம்மில் பெரும்பாலானோர் ரத்த சர்க்கரை நோய்க்கு ஆளாகாமல் இருக்க Sugar Diet இருப்பதுண்டு. ஆனால் உணவு மட்டுமே சர்க்கரை நோய் வர காரணம் கிடையாது. நாள்பட்ட மன அழுத்தம், ஒழுங்கற்ற தூக்கம், அதீத உடற்பயிற்சி, ஹார்மோன் மாற்றங்களும் சர்க்கரையை அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வெறும் sugar diet மட்டும் இல்லாமல் இவை அனைத்தையும் நீங்கள் சமாளித்தால் சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்கலாம்.
News August 14, 2025
வலுப்பெற்ற காற்றழுத்தம்.. 7 நாள்கள் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஆக. 20-ம் தேதி வரை கன முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, தேனியில் இன்று மழை பெய்யக்கூடுமாம். உங்க பகுதியில் இப்போ மழையா?
News August 14, 2025
அஜித் உடன் இணையத் தயார்: லோகேஷ்

புதுமுகங்கள் மூலம் அறிமுகமான லோகேஷ், கைதி திரைக்கதை மூலம் டாப் ஹீரோக்களை திரும்பி பார்க்க வைத்தார். அடுத்தடுத்து விஜய், கமல், ரஜினி ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் ஹிட் கொடுத்துள்ளார். இந்த வரிசையில் அஜித்துடன் அவர் இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், எப்போது அதற்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது படம் பண்ணுவேன் என்று லோகேஷ் கூறியுள்ளார். தெறிக்கவிடலாமா!