News December 4, 2024
பெண்களுக்கு எதிரான ‘சதி’க்கு முடிவு கட்டிய நாள் இன்று!

இந்தியாவில் ‘சதி’ உடன்கட்டை ஏறும் முறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்ட தினம் இன்று. கணவனை இழந்த (விரும்பாத) பெண்ணை எரியும் சிதை தீயில் தள்ளி, ‘சதி மாதா’ என்ற புனித பட்டத்தை அளிக்கும் வழக்கம் வங்கத்தில் இருந்தது. கட்டாயப்படுத்தி தீயில் இறக்கும் இம்முறையை கேரி, ராஜாராம் மோகன் ராய் போன்றோர் எதிர்த்தனர். 1829இல் இக்கொடூரத்திற்கு எதிராக சட்டமியற்றி ஆளுநர் வில்லியம் பென்டிங்க் முடிவு கட்டினார்.
Similar News
News November 27, 2025
தி.மலை: ரூ.71,900 சம்பளத்தில் வேலை-நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News November 27, 2025
சென்னையை புயல் தாக்கப் போகிறதா?.. வந்தது எச்சரிக்கை

வங்கக் கடலில் இன்று உருவாகியுள்ள டிட்வா புயல் கரையை கடக்கும் இடத்தை IMD கணித்துள்ளது. அதன்படி, நவ.30-ம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடற்கரைகளுக்கு இடையே புயல் கரையை கடக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சென்னையை புயல் தாக்க வாய்ப்பிருப்பதாக வெதர்மேன்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், புயலின் நகர்வுகளை பொறுத்து கணிப்புகள் மாறலாம்.
News November 27, 2025
MGR, ஜெ., போல விஜய்யை CM ஆக்குவார்: ஆதவ் அர்ஜுனா

தமிழகத்தில் ஊழலில்லாத, நேர்மையான புதிய நிர்வாகத்தை உருவாக்க <<18401023>>செங்கோட்டையன்<<>> தவெகவில் இணைந்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவை முதல்வராக்க உதவியது போல விஜய்யை CM ஆக்க செங்கோட்டையன் துணை நிற்பார் என்றும் அவர் தெரிவித்தார். அனைவரும் இணைந்து ஒரு புதிய வரலாற்றை படைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


