News April 15, 2025
டைட்டானிக் மறைந்த நாள் இன்று

இந்த உலகத்துல டைட்டானிக் கப்பலை தெரியாதவங்களே இருக்க முடியாது. உலகத்துலயே பெருசாவும், பாதுகாப்பானதாவும் கட்டப்பட்ட இந்த கப்பல், தன்னுடைய முதல் பயணத்துலயே கடல்ல மூழ்கிடுச்சி. அதோட நினைவு தினம் தான் இன்று. 1912ஆம் ஆண்டு, ஏப்ரல் 14ஆம் தேதி இரவு இந்தக் கப்பல் பனிப்பாறை மேல மோதி, ஏப்ரல் 15ஆம் தேதி மொத்தமாக மறைந்தது. இதில், 1,500க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமா இறந்து போனாங்க.
Similar News
News January 17, 2026
CM ஸ்டாலின் கொடி அசைவில் சீறும் காளைகள்!

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பார்வையிட உள்ளார். அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராமநாதபுரத்தில் ₹3 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனாரின் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை CM ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
News January 17, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 17, தை 3 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சதுர்தசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
News January 17, 2026
போதைப்பொருள் கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படை

கடந்தாண்டில் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் குறித்து தமிழக போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பொது போக்குவரத்தை பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தல் அதிகம் நடந்திருப்பது தெரியவந்தது. இதனால் பஸ், ரயில், விமானநிலையங்களை கண்காணிக்க சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. SI தலைமையில் 2 போலீசார் அடங்கிய இத்தனிப்படைகளின் முழுநேர பணியே, போதைப் பொருள் கடத்தலை தடுப்பதுதான்.


