News August 19, 2025
இன்று 186-வது உலக புகைப்பட தினம்

வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்வுகளை, ஒரு புகைப்படம் எளிதாக உணர்த்திவிடும். அப்படி பல புகைப்படங்கள் உலக வரலாற்றையே மாற்றியுள்ளன. அப்பேர்பட்ட புகைப்படங்களின் உன்னதத்தையும், புகைப்படக் கலைஞர்களின் திறனை பெருமைப்படுத்தும் விதமாகவும் 1839-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆக.19-ம் தேதி ‘உலக புகைப்பட தினம்’ கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று 186-வது புகைப்பட தினம். Share it!
Similar News
News August 20, 2025
சளி தொல்லையா? இந்த டீ ஒன்றே போதும்!

மழைக்கால வீசும் ஈர காற்றில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பவரா நீங்கள்? உங்களுக்காக அருமருந்து இதோ: வீட்டில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, சித்தரத்தை, ஆடுதொடா இலையை சம அளவு எடுத்து வறுத்து, இடித்து பொடியாக்கி அதை கொதிக்கும் நீரில் போட்டு இறக்கிவிட்டு தேன் கலந்து குடியுங்கள் போதும். சளி தன்னால் நீங்கிவிடும். அத்துடன் உடலுக்கு புத்துணர்வும் வரும். SHARE IT.
News August 20, 2025
அணியில் ஷ்ரேயஸ் இல்லாதது அநியாயம்!

நல்ல பார்மில் இருக்கும் ஷ்ரேயஸ் ஏன் தேர்வு செய்யவில்லை என அஸ்வின் BCCI-யிடம் கேள்வி எழுப்பியுள்ளார். IPL-ல் கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு இடம் கிடைக்காதது மிகவும் அநியாயமானது என்ற அவர், கில் நல்ல பார்மில் இருக்கிறார் என்றால், ஷ்ரேயஸும் ஓரளவு நல்ல பார்மில் தானே இருக்கிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். ஷ்ரேயஸுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கணுமா?
News August 20, 2025
திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், பாஜக முன்னாள் கரூர் தெற்கு மாநகர தலைவர், அதிமுக கரூர் தெற்கு மாநகர ஐடி விங் துணை செயலாளர் உள்ளிட்ட பலர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு திமுக அடையாள அட்டையை வழங்கி, தேர்தல் பணி மற்றும், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை தீவிரப்படுத்த செந்தில் பாலாஜி அறிவுறுத்தினார்.