News January 21, 2025

இன்று International Hug Day!

image

அன்பை வெளிப்படுத்தும் அணைப்பு, மன அழுத்தம் குறைக்கும் மருந்தும் கூட. அதை உணர்த்தும் வகையில், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்த இன்று ‘International Hug Day’ கொண்டாடப்படுகிறது. இன்றைய அவசர யுகத்தில், தன் அன்பிற்கு உரியவர்களுடன் சில மணி நேரமாவது செலவிடவும் அன்பை வெளிப்படுத்தவும் இது உந்துதலை தரும். அன்பை வெளிப்படுத்த சரியான நேரத்துக்காக காத்திருக்காதீர்கள். சரியான நேரம் இதுவே!

Similar News

News March 6, 2026

மாணவர்களை தவிக்க விட்ட திமுக அரசு: அன்புமணி

image

வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் சாதி & வருவாய்ச் சான்றிதழ்களை பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். அதுபோல, கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பதற்கான அடங்கல் ஆவணமும் உழவர்களுக்கு கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார். எனவே, வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி, போராட்டத்தை திமுக அரசு முடிவுக்கு கொண்டு வருமாறு அவர் X பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

News March 6, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 629 ▶குறள்:
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
▶பொருள்: இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.

News March 6, 2026

CINEMA 360°: பிரதீப்பின் சம்பளம் ₹50 கோடி

image

*ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ‘Ordinary Man’ படத்தின் ஷூட்டிங் தொடங்கியது *சமுத்திரக்கனியின் ‘கார்மேனி செல்வம்’ ஏப்.3-ல் ரிலீசாகும் என அறிவிப்பு *செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் டீசர் வெளியானது *தனது அடுத்த படத்திற்கு பிரதீப் ரங்கநாதன் ₹50 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் *மலையாள இயக்குநர் தின்ஜித்திடம்(EKO) தனுஷ் கதை கேட்டுள்ளாராம் *ஜீவாவின் ‘TTT’ 50 நாள்களை கடந்தது

error: Content is protected !!