News April 12, 2025
இன்று அனுமன் ஜெயந்தி… இப்படி வழிபடுங்கள்…

இன்று அனுமன் ஜெயந்தி, அதுவும் சனிக்கிழமையில் வந்துள்ளது கூடுதல் சிறப்பு. இன்று, வீட்டின் அருகில் இருக்கும் அனுமன் கோயிலுக்கு சென்று மனதார பிரார்த்தியுங்கள். மேலும், 27 வெற்றிலையை மாலையாக கோர்த்து அதனை அனுமனுக்கு அணிவித்து, மனதில் உள்ள கோரிக்கையை அவரிடம் வையுங்கள். உங்களுக்கான நல்வழியை அனுமன் காட்டுவார். ஜெய் அனுமன்! SHARE IT.
Similar News
News April 19, 2025
BREAKING : PBKS அபார வெற்றி

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த RCB-க்கு எதிரான போட்டியில் PBKS அபார வெற்றிபெற்றது. மழை காரணமாக போட்டியின் ஓவர் 14ஆக குறைக்கப்பட்டது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த RCB 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்பின் களமிறங்கிய PBKS தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தாலும், 12.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
News April 19, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News April 19, 2025
புதுமைப் பெண் திட்டம்: 4.95 லட்சம் மாணவிகள் பயன்

புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக ரூ.721 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் 4,95,000 மாணவிகள் பயனடைந்து உள்ளதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது. அதேபாேல், தமிழ் புதல்வன் திட்டத்தில் 3.80 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.