News October 25, 2024

ALERT: இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

image

கனமழை காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதேபோல் இன்றும் வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்தத் தகவலை பகிருங்கள்.

Similar News

News December 3, 2025

மகாத்மா காந்தி பொன்மொழிகள்!

image

*பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் என்பது வலிமையானவர்களின் பண்பாகும். *எப்படி சிந்திக்க வேண்டும் என்று தெரிந்தவர்களுக்கு ஆசிரியர் தேவை இல்லை. நாளைக்காக சிந்தியுங்கள் ஆனால் இன்றைக்காக செயல்படுங்கள். *மனித குலத்தின் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் அமைதி. *கோபம் அஹிம்சையின் எதிரி. அகங்காரம் அதை விழுங்கும் ஒரு அரக்கன் எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது.

News December 3, 2025

கொலை மிரட்டல் வழக்கில் சீமானுக்கு சம்மன்

image

புதுச்சேரியில், செய்தியாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, ஏற்கெனவே நாதகவின் நிர்வாகிகள் சுந்தரபாண்டி, செல்வம் ஆகியோர் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். இந்நிலையில், டிச.8-ம் தேதி நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சீமானுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளனர்.

News December 3, 2025

உள்ளூர் போட்டிகளில் களமிறங்கும் கோலி

image

டிச.24-ம் தேதி தொடங்கும் விஜய் ஹசாரே (VHT) தொடரில் டெல்லி அணிக்காக கோலி விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வடிவிலான கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடும் கோலி, 2027 WC வரை தனது ஃபார்மை மெயின்டெயின் செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளார். விஜய் ஹசாரே மட்டுமின்றி BCCI நடத்தும் உள்ளூர் போட்டிகளில் விளையாட கோலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக 2010-ல் கோலி VHT-ல் ஆடியிருந்தார்.

error: Content is protected !!