News August 26, 2024
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட்-26 (ஆவணி 10) ▶திங்கள்கிழமை ▶நல்ல நேரம்: 09:00-10:00AM&04.45-05.45PM ▶கெளரி நேரம்: 01:45-02:45AM&07:30-08:30PM ▶இராகு காலம்: 07:30-09:00PM ▶எமகண்டம்: 10:30AM-12:00PM ▶குளிகை: 01:30-03:00PM ▶திதி: 09.12 AM வரை சப்தமி பின்பு அஷ்டமி ▶நட்சத்திரம் 09.40 PM வரை கிருத்திகை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶அமிர்தாதி யோகம்: சித்தயோகம், மரணயோகம், அமிர்தயோகம் ▶சந்திராஷ்டமம்: 09.40 PM வரை சித்திரை.
Similar News
News January 14, 2026
உலகமெங்கும் கால்பதிக்க தயாராகும் UPI!

இந்தியாவின் உள்நாட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை தளமான UPI-ஐ, பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி சேவைகள் செயலாளர் நாகராஜு தெரிவித்துள்ளார். இதன்மூலம் வெளிநாடு செல்லும் இந்தியர்கள் சிரமமின்றி டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். பூடான், சிங்கப்பூர், கத்தார், பிரான்ஸ் உள்ளிட்ட 8 நாடுகளில் தற்போது UPI வசதி செயல்பாட்டில் உள்ளது.
News January 14, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 580 ▶குறள்: பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். ▶பொருள்: கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.
News January 14, 2026
சிப்ஸ் பாக்கெட் பொம்மை வெடித்து பார்வை இழப்பு!

சிப்ஸ் பாக்கெட்டில் வரும் பொம்மை வெடித்து குழந்தையின் கண்பார்வை பறிபோன துயர சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. 8 வயதான அன்கேஷ், சிப்ஸ் பாக்கெட்டில் வந்த பொம்மையை வைத்து சமையல் அறையில் விளையாடியுள்ளான். அப்போது, அந்த பொம்மை ஸ்டவ்வில் விழுந்து வெடித்ததால் கண்பார்வை பறிபோயுள்ளது. கடந்த மாதம் இதே மாநிலத்தில் சிப்ஸ் பாக்கெட் பொம்மையை விழுங்கி 4 வயது குழந்தை பலியானது. பெற்றோர்களே கவனம்.


