News August 18, 2024
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் – 18 ▶ஆவணி – 02 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM & 01:30 PM – 02:00 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 01:30 PM – 02:30PM ▶ராகு காலம்: 04:30 PM – 06:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM ▶குளிகை: 03:00 PM – 04:30 PM >▶திதி: சுன்ய திதி▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்.
Similar News
News January 1, 2026
திமுகவின் அடிமைகளான VCK, கம்யூனிஸ்ட் கட்சிகள்: பாஜக

தமிழகத்தில் செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என பல தரப்பினரும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தமிழிசை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் திமுக அரசுக்கு எதிராக திருமாவளவனோ, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களோ குரல் கொடுக்கவில்லை என்றும், அவர்கள் திமுகவின் அடிமைகளாக மாறிவிட்டதாகவும் கடுமையாக சாடியுள்ளார். மேலும் காங்கிரஸில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 1, 2026
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கொடூரன் கைது

தமிழகத்தில் பள்ளி மாணவிகள் கர்ப்பமாகும் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மேட்டூரில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. மாணவி சற்று மனநலம் குன்றியவர் என்பதால், கூலித் தொழிலாளி சரண் என்பவர் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். தற்போது, போக்சோ சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
News January 1, 2026
புத்தாண்டில் கைதான போலி தீர்க்கதரிசி!

2025 டிச.25-ம் தேதி உலகம் அழியும் என பீதியை கிளப்பிய எபோ நோவா என்பவரை கானா போலீஸ் கைது செய்துள்ளது. தன்னை தீர்க்கதரிசி என்றும், தான் கட்டி வரும் படகில் ஏறினால் தப்பிக்கலாம் என்றும் கூறி நிதி திரட்டினார். ஆனால் அவர் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை. மேலும் மக்களிடம் திரட்டிய நிதியில் ஆடம்பர கார் வாங்கியது சர்ச்சையானது. இந்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி நோவா இன்று கைதாகியுள்ளார்.


