News October 8, 2025
குழந்தைகள் பாதுகாப்பில் இன்று கருப்பு நாள்: அன்புமணி

குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் நாம் வலிமையற்று இருக்கிறோம் என்பதற்கு தஷ்வந்த் வழக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். தஷ்வந்த் தவறு செய்யவில்லை என்றால் ஹாசினியை கொலை செய்தது யார்? எனவும், இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே விசாரணை சரியாக நடைபெறவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 8, 2025
BREAKING: சாதிப் பெயர்களை நீக்க அரசாணை

ஊர்கள், தெருக்கள், குளங்களின் பெயருக்கு பின்னால் உள்ள சாதிப் பெயர்களை நீக்க TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம், பறையர் தெரு, சக்கிலியர் சாலை உள்ளிட்ட பெயர்களை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை நவ.19-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் ஆணையிடப்பட்டுள்ளது.
News October 8, 2025
இளைஞர்களுக்கு அமேசான் நிறுவனரின் அட்வைஸ்

தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்கள் McDonald’s-ல் வேலை செய்ய வேண்டும் என அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தெரிவித்துள்ளார். அங்கு வேலை பார்த்தால் பொறுப்புணர்வு, கஸ்டமர்களிடம் நடந்து கொள்ளும் விதத்தை கற்றுக்கொள்ளலாம். ஒருவர் 20 வயதில் தொழில் தொடங்க வேண்டிய அவசியமில்லை, முதலில் இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News October 8, 2025
பிரசாதங்களுக்கு பெயர்பெற்ற கோயில்கள்

கோயில்கள் பல்வேறு காரணங்களால் பிரபலமாக உள்ளன. அதில், சில கோயில்கள் பிரசாதங்களுக்கு பெயர்பெற்றவை. அவை எந்த கோயில்கள், அங்கு என்ன பிரசாதம் கிடைக்கும் என்பதை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்க ஊர் கோயில்களில் என்ன பிரசாதம் கிடைக்கும் என்று கமெண்ட்ல சொல்லுங்க.