News August 31, 2025
வரலாற்றில் இன்று (ஆகஸ்ட் 31)

*1957 – பிரிட்டிஷ் அரசிடம் இருந்து மலேசியா விடுதலை பெற்றது
*1969 – இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜவகல் ஸ்ரீநாத் பிறந்த நாள்
*1979 – சினிமா இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள்
*1997 – வேல்ஸ் இளவரசி டயானா, பாரிசில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார்.
* 2020 – இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நினைவு தினம்
Similar News
News September 1, 2025
ஹமாஸ் முக்கிய தலைவர் கொல்லப்பட்டார்

பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருக்க, இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தாக்குதலில் ஹமாஸ் ஆயுதப் படையின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபெய்டா கொல்லப்பட்டதாக, இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். இதனை ஹமாஸ் அமைப்பு உறுதி செய்யாத நிலையில், ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டதை, அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது.
News September 1, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 1, ஆவணி 16 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்:6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: நவமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை
News September 1, 2025
தமிழகம் வருகிறார் ஜனாதிபதி முர்மு

3 நாள்கள் பயணமாக ஜனாதிபதி திரெளபதி முர்மு கர்நாடகா மற்றும் தமிழகம் வருகிறார். இன்று மைசூரில் நடைபெறும் AIISH வைர விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார். தொடர்ந்து நாளை (செப்.2) தமிழகம் வரும் அவர், சென்னையில் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது நிறுவன நாளில் பங்கேற்கிறார். செப்.3-ல் திருவாரூர் மத்திய பல்கலையின் 10-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிவிட்டு டெல்லி திரும்புகிறார்.