News August 30, 2025
வரலாற்றில் இன்று (ஆகஸ்ட் 30)

* 1835 – ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்டது
*1954 – தமிழக அரசியல் பிரபலம் TKS இளங்கோவன்(DMK) பிறந்தநாள் 1954
* 1957 – பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம்
* 1963 – நடிகர் ஆனந்த் பாபு பிறந்தநாள் (1963)
*2001 – மூத்த அரசியல் தலைவர் ஜி.கே.மூப்பனார் நினைவு தினம்
Similar News
News August 30, 2025
வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி

உத்தராகண்டில் கனமழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். சமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி, பகேஷ்வர் மாவட்டங்களில் மேகவெடிப்பால் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில், அடித்துச் செல்லப்பட்ட 11 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
News August 30, 2025
வெற்றியின் ரகசியம்.. இந்த 5 டிப்ஸில் உள்ளது!

*பிறர் சொல்லியோ, பிறரை வைத்தோ இலக்கை நிர்ணயிக்காதீர்கள். நீங்கள் தீர்மானியுங்கள்
*வாழ்வில் நடப்பது நல்லதோ, கெட்டதோ அனைத்திற்கும் நீங்களே பொறுப்பு என்பதை மறவாதீர்கள்.
*ரிஸ்க் எடுப்பதற்கு தயங்க வேண்டாம்.
*என்றைக்கும் புது விஷயங்களை கற்றுக்கொள்வதை நிறுத்தி விடாதீர்கள்
*எப்போதும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக மனதில் கொள்ளுங்கள். சிறு தோல்விகளால் துவண்டு விட வேண்டாம் . SHARE IT.
News August 30, 2025
புதிய ரீசார்ஜ்.. ஜாக்பாட் ஆஃபர்

BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு BiTV பிரீமியம் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை மூலம், 25-க்கும் மேற்பட்ட OTT தளங்கள், 450-க்கும் மேற்பட்ட நேரடி TV சேனல்களை ஒரே செயலியில் ₹151-ல் பெறலாம். மேலும், ₹28-க்கு 30 நாள்கள் செல்லுபடியாகும், 7 OTT தளங்களை வழங்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், TV-க்கு மாதந்தோறும் ஆகும் செலவு கணிசமாக குறையும் என பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.