News March 22, 2024

வரலாற்றில் இன்று!

image

➤1945 – அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது. ➤ 1960 – ஆர்தர் ஷாவ்லொவ் மற்றும் சார்லஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தை பெற்றனர். ➤1982 – நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது. ➤1993 – இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப்-ஐ அறிமுகம் செய்தது. ➤1995 – சோவியத் விண்வெளி வீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.

Similar News

News April 27, 2025

தேமுதிக முக்கிய முடிவு : பிரேமலதா பிளான் என்ன?

image

வருகிற 30-ம் தேதி பாலக்கோட்டில் நடைபெறவுள்ள தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் ADMK – BJP கூட்டணி உருவாகியுள்ள நிலையில், 2026 தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதா தலைமையில் முக்கிய முடிவெடுக்கப்பட உள்ளது. ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுகவுடன் உரசல் இருப்பினும், பாஜகவை அண்மையில் தேமுதிக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

News April 27, 2025

தமிழ் திரை பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம்

image

தமிழ் திரை பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநரும், நடிகருமான மனோஜ் குமார் அண்மையில் காலமானார். இதேபோல், நடிகர் நாகேந்திரன் நேற்று திடீரென மரணமடைந்தார். மேலும் நடிகர்கள் கராத்தே ஹூசைனி, ரவிகுமார், நடிகை பிந்து கோஸ், இயக்குநர் எஸ்.எஸ். ஸ்டான்லி, தயாரிப்பாளர் ராமநாதன், டிவி நடிகர் யுவராஜ் நேத்ரன் ஆகியோரும் அண்மையில் மரணமடைந்தனர்.

News April 27, 2025

மீண்டும் DC-ல் களமிறங்கும் ஸ்டார் பிளேயர்!

image

DC-யின் ஓப்பனர் ஃபாப் டு பிளெசிஸ் காயத்திலிருந்து மீண்டுள்ளார் . அவர் இன்று டெல்லியில் RCB-க்கு எதிரான மேட்சில் விளையாட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் அணியில் இடம் பெறும் பட்சத்தில், DC-யின் பேட்டிங் இன்னும் பலம் பெறும். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி நடைபெற்ற RCB-க்கு எதிரான போட்டியில் காயமடைந்த அவர், தொடர்ச்சியாக 4 மேட்சில் விளையாடவில்லை.

error: Content is protected !!