News October 26, 2025
வரலாற்றில் இன்று

*1947 – காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த நாள்
*1950 – கொல்கத்தாவில் முதல் தொண்டு நிறுவனத்தை அன்னை தெரசா தொடங்கினார்
*1965 – பாடகர் மனோ பிறந்த நாள்
*1985 – நடிகை அசின் பிறந்த நாள்
*1999 – SC ஆயுள் தண்டனைக்கான காலத்தை 14 ஆண்டுகளாக நிர்ணயித்தது
*2015 – ஆப்கானித்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 398 பேர் பலி
Similar News
News October 26, 2025
வங்கிக் கணக்கில் ₹17,000 செலுத்துகிறது தமிழக அரசு

கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு சேதத்திற்கு ஏற்ப நிவாரண தொகை வழங்கப்படும் என அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தேனியில் வெள்ள பாதிப்புகளை கணக்கெடுத்த அதிகாரிகள், நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ₹17,000, இதர நவதானிய பயிர்களுக்கு ₹13,000, வாழை, திராட்சை போன்றவற்றிற்கு ₹22,500 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
News October 26, 2025
மறந்துகூட வீட்டில் இங்க லட்சுமி படத்தை வச்சுராதீங்க!

வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் லட்சுமி படம் அல்லது விக்கிரகத்தை வடக்கு திசையில் இருந்து தெற்கு பார்த்தபடி வைக்க வேண்டுமாம். அதுவே, மங்களகரமானது என சொல்லப்படுகிறது. இதுதவிர, தாமரை மலரில் இருக்கும் லட்சுமி படத்தை இந்த திசையில் வைத்தால் வீட்டில் பணத்திற்கு தட்டுப்பாடு வராது என்ற நம்பிக்கை உள்ளது. தவறுதலாக கூட வடக்கு பார்த்தபடி வைக்க வேண்டாம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
News October 26, 2025
டெங்குவிலிருந்து குழந்தைகளை காப்பது எப்படி?

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படலாம். இதிலிருந்து அவர்களை பாதுகாக்க இந்த சிம்பிள் வழிகளை செய்யுங்கள் போதும். ➤தண்ணீர் தேங்கும் காலி கப்கள், டயர்கள், காலி பாட்டில்களை அப்புறப்படுத்துங்கள் ➤குழந்தைகளுக்கு முழுக்கை சட்டை அணிவியுங்கள் ➤ஜன்னல்களில் கொசு வலை போடுங்கள் ➤சத்தான, சூடான உணவுகளை கொடுங்கள். விழிப்புணர்வுக்காக அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


