News October 24, 2025
வரலாற்றில் இன்று

*1801 – சுதந்திர போராட்ட வீரர்களான மருதுபாண்டிய சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்
*1857 – உலகின் முதலாவது கால்பந்தாட்ட அணி செபீல்டு, இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது
*1945 – ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது
*1980 – நடிகை லைலா பிறந்த தினம்
*1994 – கொழும்பு தேர்தல் கூட்டத்தில், நடந்த குண்டுவெடிப்பில் 52 பேர் கொல்லப்பட்டனர்
Similar News
News October 24, 2025
வீட்டில் தங்கம் சேர இன்று இந்த வழிபாட்டை பண்ணுங்க!

வெள்ளிக்கிழமை அன்று காலை வீட்டை சுத்தம் செய்து, விளக்கு ஏற்றி லட்சுமியை வழிபட்டு விட்டு, மாலையில் லட்சுமி தேவிக்கு தாமரை மலர் கொண்டு வழிபட வேண்டும். மேலும், மஞ்சள், குங்குமம், இனிப்பு நைவேத்தியம் படைத்து முழு மனதுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும். தொடர்ந்து 3 வெள்ளிக்கிழமைகள் இப்படி வழிபடுவதால், லட்சுமி தேவியின் அருள் கிடைத்து, வீட்டில் லட்சுமி கடாட்சம் கூடி, செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது.
News October 24, 2025
பள்ளிகளுக்கு விடுமுறையா? சற்றுநேரத்தில் அறிவிப்பு

கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்.24) கனமழை தொடரும் என IMD தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக கடந்த 2 நாள்களாக தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல், இன்றும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து, கலெக்டர்கள் சற்றுநேரத்தில் அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
News October 24, 2025
காலையில் இஞ்சி சாறு குடிப்பதால் வரும் நன்மைகள்

*மலச்சிக்கல், வாயுத்தொல்லை, வயிற்றுவலிக்கு நல்ல தீர்வாக இருக்கும். *இஞ்சி சாறு இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் ரத்த சக்கரை அளவையை கட்டுபடுத்தும். *தினசரி உணவில் இஞ்சி சாறு சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவும். *கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் இஞ்சி சாறு உதவும். *இஞ்சி சாறு உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவும்.


