News October 23, 2025
வரலாற்றில் இன்று

1989 – பாடகி ஜொனிதா காந்தி பிறந்தநாள்
2001 – காஷ்மீர் விமானத் தளத்தைப் தகர்க்கும் தீவிரவாதிகளின் தற்கொலைப் படை முயற்சியை முறியடித்த ராணுவம்
2002 – மாஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் தீவிரவாதிகளினால் 700 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்
2011 – துருக்கியில் 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 582 பேர் பலி
2023 – முன்னாள் கிரிக்கெட் வீரர் பிசன் சிங் பேடியின் நினைவு நாள்
Similar News
News October 23, 2025
கரூர் வழக்கில் 2 IPS அதிகாரிகள் நியமனம்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் CBI விசாரணையை மேற்பார்வை செய்யும் குழுவுக்கு 2 IPS அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எல்லை பாதுகாப்பு படையில் ஐஜியாக பணிபுரியும் சுமித் சரண், டெல்லியில் ரிசர்வ் போலீஸ் படை ஐஜியாக பணிபுரியும் தமிழக பிரிவு IPS அதிகாரி சோனல் மிஸ்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சுமித் சரண் கோவை மாநகர போலீஸ் கமிஷனராகவும், சோனல் மிஸ்ரா திருச்சி, ஈரோடு, கிருஷ்ணகிரியில் பணியாற்றியுள்ளனர்.
News October 23, 2025
மழை காலத்தில் இந்த கசாயம் குடிங்க!

✱தேவை: வெற்றிலை, கற்பூரவல்லி இலை, கண்டந்திப்பிலி, மல்லி விதைகள், சீரகம், மிளகு, திராட்சை, மஞ்சள் தூள், சுக்குப்பொடி, வெற்றிலை ✱உலர் திராட்சையை நீரில் ஊறவைக்கவும். வெற்றிலை, கற்பூரவல்லி தனியா, மிளகு, கண்டந்திப்பிலி ஆகியவற்றை நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு, சீரகம், மஞ்சள் தூள், சுக்குப்பொடியுடன் திராட்சையை சேர்த்து மசித்து கொள்ளவும். இதனை வடிகட்டி, தேன் கலந்து குடிக்கலாம். SHARE IT.
News October 23, 2025
புதிய தடைகளை விதித்தார் டிரம்ப்!

ரஷ்யாவின் 2 பெரிய எண்ணெய் நிறுவனங்களான Rosneft, Lukoil மீதும், அதன் துணை நிறுவனங்கள் மீதும் USA பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. உக்ரைன் போர் குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க புதிய தடைகளை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் உடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை புடின் ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.