News October 22, 2025
வரலாற்றில் இன்று

*1879 – தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்விளக்கைப் பரிசோதித்தார்.
*1965 – இந்தியா- பாகிஸ்தான் இடையான இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது.
*2001 – பிஎஸ்எல்வி சி-மூன்று விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
*2008 – இஸ்ரோ சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை ஏவியது.
*2016 – இந்தியா கபடி அணி உலகக் கோப்பையை வென்றது
Similar News
News October 22, 2025
மழைக்காலத்தில் மறந்தும் இதை செஞ்சிடாதீங்க..

*ஈரமான கையோடு சுவிட்ச் on/ off செய்ய வேண்டாம்.
*மின்சார கம்பிகள் அறுந்திருந்தால், அதனருகில் செல்ல வேண்டாம்.
*இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, மொபைல், கணினி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களை தவிர்ப்பது நல்லது.
*குளிர்ச்சியான பொருள்களை உண்ண வேண்டாம். *பழச்சாறுகளை தவிர்த்து, பழங்களை உண்ணலாம். *பச்சை மரங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம்.
News October 22, 2025
BREAKING: 15 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

TN-ல் தொடர் மழை காரணமாக 14 மாவட்டங்களில் இன்று(அக்.22) பள்ளிகளுக்கு விடுமுறையாகும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி ஆகிய 15 மாவட்டங்களில் இதுவரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறையாகும்.
News October 22, 2025
ரோஹித், கோலிக்கு ஆஸி., தொடர் முக்கியம்: பாண்டிங்

ரோஹித் சர்மா, விராட் கோலி அடுத்த 2027 WC வரை விளையாடுவார்களா என்ற கேள்வி ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டே இருக்கிறது. இதனிடையே, WC வரை இருவரும் விளையாடுவார்களா என்பதை ஆஸ்திரேலியா தொடர் தீர்மானிக்கும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு சிறிய இலக்குகளை வைத்து இருவரும் பயணிப்பதே சிறப்பாக இருக்கும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.