News October 20, 2025

வரலாற்றில் இன்று

image

*1963 – இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பிறந்தநாள்.
*1974 – பாடலாசிரியர் பா.விஜய் பிறந்தநாள்.
*1978 – இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பிறந்தநாள் .
*1991 – உத்தரகாசியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*2008 – தமிழ திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் நினைவுநாள்.

Similar News

News October 20, 2025

இந்த தீபாவளியில் இருந்து இத பண்ணாதீங்க

image

காலையில் இந்த உணவுகளை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர் ➣அதிக கொழுப்புள்ள உணவுகள்: பூரி, பரோட்டா போன்றவற்றை காலையில் தவிர்ப்பது நல்லது ➣பதப்படுத்தப்பட்ட உணவுகள்: கொழுப்பு இறைச்சி, பிற சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வதால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் ➣அதிக சர்க்கரை: இது உடலின் கொலஸ்ட்ராலை அதிகரிப்பதோடு, ட்ரைகிளிசரைடுகளையும் அதிகரிக்கிறது. SHARE.

News October 20, 2025

அரசின் அலட்சியத்தால் வெள்ளத்தில் தவிப்பு: நயினார்

image

திமுக அரசின் அலட்சியத்தால் தேனி மாவட்டம் வெள்ளத்தில் தத்தளிப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தேனி பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயர் நகர் குடியிருப்பு பகுதிக்குள் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இதனை சுட்டிக்காட்டிய அவர், பருவமழை துவங்கும்முன் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.

News October 20, 2025

லட்சுமி குபேர பூஜைக்கான பலன்களும்.. உகந்த நேரமும்

image

லட்சுமி குபேர பூஜை என்பது லட்சுமி தேவியையும், குபேரரையும் வேண்டி செய்யும் வழிபாடாகும். தீபாவளியில் இதனை செய்வதால் சங்கடங்களும், காரியத்தடைகளும் நீங்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இல்லத்தில் செல்வம் பெருகும். மாலை 3:45 முதல் இரவு 7 மணிவரை லட்சுமி பூஜை செய்ய நல்ல நேரம். தீபாவளி அன்று, குபேர பூஜையை செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள், சிவ – விஷ்ணு கோவில்களில், லட்சுமி தேவியை தரிசிக்கலாம்.

error: Content is protected !!