News September 26, 2025

வரலாற்றில் இன்று

image

1905 -ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்பு சார்புக் கோட்பாடு தொடர்பான முதலாவது ஆய்வை வெளியிட்டார்
1932 – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாள்
1954 – ஜப்பான் கப்பல், சூறாவளியில் மூழ்கியதில் 1,172 பேர் உயிரிழந்தனர்
1954 – கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் நினைவு நாள்

Similar News

News September 26, 2025

தமிழகத்தில் 5 நாள் தொடர்ந்து விடுமுறையா?

image

அக்.1 (புதன்) ஆயுதபூஜை, அக்.2 விஜயதசமிக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் ஒருநாள் மட்டும் வெள்ளிக்கிழமை (அக்.3) வேலை நாளாக இருக்கிறது. அதன்பின், சனி, ஞாயிறு விடுமுறை வந்துவிடுகிறது. இந்நிலையில், அக்.3-ம் தேதியும் விடுமுறை அளிக்க கோரி, CM ஸ்டாலினுக்கு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அமிர்தகுமார் கடிதம் எழுதியுள்ளார். அக்.3 விடுமுறை அளித்தால், தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறையாகும்.

News September 26, 2025

41 ஆண்டுகால ஆசிய கோப்பை வரலாற்றில்..

image

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் வரும் 28-ம் தேதி ஆசிய கோப்பை இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 41 ஆண்டுகால ஆசிய கோப்பை வரலாற்றில் முதல்முறை இவ்விரு அணிகளும் இத்தொடரின் இறுதி போட்டியில் விளையாடுகின்றன. லீக் சுற்று, சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி, இறுதி போட்டியில் அசால்ட்டாக கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். யார் கோப்பையை ஜெயிப்பாங்க?

News September 26, 2025

இந்த 2 பழக்கம் இருக்கா? ஹார்ட் அட்டாக் கன்ஃபார்ம்

image

காலை உணவை தவிர்ப்பது, இரவு உணவை தாமதமாக சாப்பிடுவதால் ஹார்ட் அட்டாக் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த 2 பழக்கங்களால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதாம். பிறகு நாளடைவில், ஹார்ட் அட்டாக்குக்கு வழிவகுக்கும் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் உற்பத்தியையும் அதிகப்படுத்துகிறது. எனவே இந்த தவறுகளை செய்யாதீர்கள் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.

error: Content is protected !!