News April 16, 2025
வரலாற்றில் இன்றைய தினம்

> அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது (1862)
> ஜாலியன் வாலா பாக் படுகொலையை கண்டித்து காந்தி ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார் (1919)
> கியூபாவை ஒரு பொதுவுடைமை நாடு என்று பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார் (1961)
> முதலாவது உலக தமிழ் மாநாடு மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது (1966)
Similar News
News December 9, 2025
விபத்தில் சிக்கி பிரபல நடிகர் காயம்

‘இதுதாண்டா போலீஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் ராஜசேகர், ஷூட்டிங்கின்போது விபத்தில் சிக்கியது தாமதமாக தெரியவந்துள்ளது. கடந்த 25-ம் தேதி சண்டைக் காட்சியின்போது, நடந்த விபத்தில் அவரது வலது குதிகாலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சுமார் 4 வார ஓய்வுக்குப்பின் அவர் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.
News December 9, 2025
₹35,400 சம்பளம்.. நாளையே கடைசி: APPLY

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட 2,569 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ, டிகிரி. வயது வரம்பு: 18 – 33. சம்பளம்: ₹35,400 முதல் Level 6 அடிப்படையில் வழங்கப்படும். தேர்வு முறை: Tire 1 & 2, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.10. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News December 9, 2025
அமெரிக்காவில் இந்திய அரிசிக்கு புதிய வரியா?

இந்திய பொருள்களுக்கு USA-வில் ஏற்கெனவே 50% வரி விதிக்கப்பட்ட நிலையில், இந்திய அரிசிக்கு புதிய வரி விதிக்க பரிசீலிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய அரசு மானியங்கள் வழங்கி, USA சந்தையில் அரிசியை குறைந்த விலைக்கு விற்பதால், நஷ்டம் ஏற்படுவதாக USA விவசாயிகள் டிரம்ப்பிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை ‘ஏமாற்று வேலை’ என்று விமர்சித்த டிரம்ப், புதிய வரி விதிக்க திட்டமிட்டுள்ளார்.


