News April 11, 2025
வரலாற்றில் இன்று

➤2012 – இந்தோனேசியாவில் சுமத்ரா கடற்பகுதியில் 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. தமிழ்நாட்டிலும் சில இடங்களில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ➤1829 – கொழும்பு, புறக்கோட்டை நூலகம் ஆரம்பிக்கப்பட்டது ➤1865 – ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி உரையை நிகழ்த்தினார். ➤1905 – ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார். ➤1970 – அப்பல்லோ 13 விண்கலம் ஏவப்பட்டது.
Similar News
News December 10, 2025
புதுக்கோட்டை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு?

புதுக்கோட்டையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 10, 2025
210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும்: EPS

திமுக தலைவர்கள் அதிமுகவை விமர்சிப்பது கேலிக்கூத்தாக உள்ளது என EPS கூறியுள்ளார். பல தேர்தல்களில் தனிப்பெரும்பான்மை பெற்ற அதிமுகவை பற்றி தெரியாமல் CM பேசுவதாக கூறிய அவர், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும் என சூளுரைத்தார். மேலும், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்ததை பற்றி மட்டுமே விமர்சிக்க முடியுமே தவிர, தங்கள் ஆட்சியில் எந்த குறையும் சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
நீட்டை ரத்து செய்யாததை கண்டித்து அதிமுக தீர்மானம்

அதிமுக கூட்டத்தில் மேலும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ➤பேரிடர்களின் போது மக்களை பாதுகாப்பதில் தோல்வியடையும் TN அரசுக்கு கண்டனம் ➤அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் ஆமை வேகம் காட்டுவதாக கண்டனம் ➤கோதாவரி-காவிரி இணைப்பில் அக்கறை இல்லை என கண்டனம் ➤நீட் ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு, சிலிண்டருக்கு மானியம் ஆகிய வாக்குறுதிகளை காப்பாற்றாததற்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


