News March 17, 2024
வரலாற்றில் இன்று

➤1919 – ரெளலட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார். ➤ 1950 – கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் “கலிபோர்னியம்” என்ற 98-வது தனிமத்தை கண்டுபிடித்ததாக அறிவித்தனர். ➤ 1959 – 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார். ➤1963 – பாலித் தீவில் ஆகூங்கு எரிமலை வெடித்ததில் 1,100 பேர் உயிரிழந்தனர்.
Similar News
News November 4, 2025
கோவை சம்பவம்: போலீஸ் என்ன செய்கிறது? பிரேமலதா

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை பிரேமலதா விஜயகாந்த் வன்மையாக கண்டித்துள்ளார். விமான நிலையம் போன்ற முக்கியமான இடத்தில் இதுபோன்று நடக்கிறது என்றால் போலீஸ் என்ன செய்கிறது எனவும், CCTV கேமரா அனைத்து இடங்களிலும் செயல்படுகிறதா என்பதை அரசு ஆய்வு செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், குற்றவாளிகளை உடனே கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
News November 4, 2025
ராசி பலன்கள் (04.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 4, 2025
போட்டிபோட்டு ஆஃபர் அறிவித்த நிறுவனங்கள்

Zepto-வை தொடர்ந்து Instamart-ம் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ₹299-க்கு மேல் ஆர்டர் செய்தால், டெலிவரி கட்டணம் உள்பட எவ்வித கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது. ₹199-க்கு மேல் ஆர்டர் செய்தால் ₹16, அதற்கு கீழ் ஆர்டர் செய்தால் ₹30 சராசரியாக வசூலிக்கப்படும். முன்னதாக, இலவச டெலிவரிக்கான குறைந்தபட்ச ஆர்டர் தொகையை ₹199-ல் இருந்து ₹99 ஆக <<18188504>>Zepto<<>> குறைத்தது.


