News February 27, 2025
இன்றைய (பிப். 27) நல்ல நேரம்

▶பிப்ரவரி- 27 ▶மாசி – 15 ▶கிழமை: வியாழன்
▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM
▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 01:30 PM- 03:00 PM
▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM
▶குளிகை: 09:00 AM- 10:30 AM
▶திதி: அமாவாசை ▶சூலம்: தெற்கு
▶பரிகாரம்: தைலம் ▶சந்திராஷ்டமம்: பூசம்
▶நட்சத்திரம்: அவிட்டம் மா 4.07
Similar News
News February 27, 2025
உ.பி. வாரியர்சை வீழ்த்திய மும்பை அணி

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் உ.பி. வாரியர்சை மும்பை அணி வென்றது. முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிரேஸ் ஹாரிஸ் 45 ரன்கள் எடுத்தார். 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ், 17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழந்து இலக்கை எட்டியது. அந்த அணியின் ஸ்கிவர்-ப்ரண்ட் 75 ரன்கள் எடுத்தார்.
News February 27, 2025
மகா கும்பமேளா நிறைவு: 68 கோடி பக்தர்கள் நீராடினர்

உ.பி பிரயாக்ராஜ் நகரில் 45 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவடைந்தது. கடந்த மாதம் 13ஆம் தேதி பவுர்ணமி தினத்தன்று தொடங்கிய மகா கும்பமேளாவில், இதுவரை 68 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடினர். மகா கும்பமேளா இனி 2169ஆம் ஆண்டுதான் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
News February 27, 2025
ஈஷாவில் களைகட்டிய மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி விழாவையொட்டி கோவை ஈஷா மையத்தில் சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை, நடிகர்கள் சந்தானம், நடிகை தமன்னா, விஜய் வர்மா, ஓம்பிரகாஷ் மெஹ்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.