News February 26, 2025
இன்றைய (பிப். 26) நல்ல நேரம்

▶பிப்ரவரி- 26 ▶மாசி – 14 ▶கிழமை: புதன்
▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 12:00 PM- 01:30 PM
▶எமகண்டம்: 07:30 AM – 09:30 AM
▶குளிகை: 10:30 AM- 12:00 PM
▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: புனர்பூசம்
▶நட்சத்திரம் : திருவோணம் மா 4.51
Similar News
News February 26, 2025
புரோ ஹாக்கி தொடர்: இந்தியா அபார வெற்றி

பெண்கள் புரோ ஹாக்கி தொடரில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் வழக்கமான நேரம் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ஷூட்-அவுட் விதி கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இந்தியா அபாரமாக செயல்பட்டு 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்தது. இதுவரை 8 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்திய அணிக்கு இது 3வது வெற்றியாகும்.
News February 26, 2025
முதல்வர் அரசியல் செய்கிறார்: அண்ணாமலை

மும்மொழிக் கொள்கையில் தோல்வி அடைந்த காரணத்தினால், தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு நடக்கும் என மத்திய அரசு எங்கும் சொல்லவில்லை என்றும், அதற்கு முன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். இல்லாத ஒன்றை முதல்வர் பேசுவதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
News February 26, 2025
TVK 2ஆம் ஆண்டு தொடக்க விழா கோலாகலம்

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று காலை நடைபெறவுள்ளது. 2026 சட்டசபை தேர்தல், கூட்டணி, கட்சியை பலப்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பாகவும் தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தேர்தல் வியூக பணியில் கைகோர்த்துள்ள பிரசாந்த் கிஷோரும் இந்த விழாவில் பங்கேற்க இருக்கிறார்.